ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

Photo of author

By Jayachithra

ப்ப்பா…இத்தனை குழந்தைகளா?!! இது போதாதுன்னு இன்னும் 105 குழந்தைகள் வேணுமாம்!!

ரஷ்ய நாட்டில் 11 குழந்தைகளுக்கு தாய், தந்தையரான தம்பதிகள் தங்களுக்கு மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகின்ற நிலையில், ரஷ்யாவைச் சேர்ந்த தம்பதிகள் 11 குழந்தைகள் பெற்று உள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு அது போதவில்லை என்றும், இன்னும் 105 குழந்தைகள் வேண்டும் எனவும் கூறி இருக்கின்றனர். ரஷ்யாவைச் சார்ந்த கிறிஸ்டினா ஒஸ்டுரக் என்பவருக்கு 23 வயது ஆகும். அத்துடன் இவர் 56 வயதான காலிப் ஒஸ்டுரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11 குழந்தைகள் இருக்கின்றது. ஆனால், முதலில் பிறந்த குழந்தை மட்டுமே இவர்களுக்கு பிறந்தது. மற்ற பதினோரு குழந்தைகளும் வாடகை தாய் மூலமாக பிறந்த குழந்தைகள்.

குழந்தைகள் என்றால் கிறிஸ்டினாவுக்கு மிகவும் பிரியம். இதன் காரணமாக அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். தற்போது 11 குழந்தைகள் இருக்கும் நிலையில், மேலும் 105 குழந்தைகள் வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்ள என்ன வழி என்று இவர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CPlmCpmlV5t/?utm_source=ig_web_copy_link

கோடீஸ்வர தம்பதிகளான இவர்கள் இந்த 11 குழந்தைகளை பராமரிக்க வீட்டில் ஆட்கள் அமர்த்தி இருக்கின்றனர். குழந்தைகளுடைய உணவு மற்றும் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள ஆட்கள் உள்ளனர். வேலையாட்கள் சரியாக வேலை செய்கிறார்களா? என்பதை பார்ப்பது மட்டுமே கிறிஸ்டினா மற்றும் அவரது கணவருக்கும் வேலை .இந்த குழந்தைகளின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் தீயாக பரவி வருகிறது.