பெண்களுக்கு தங்கள் வாழ்வில் முக்கிய நிகழ்வாக இருப்பது பூப்பெய்தல் தான்.ஒரு குழந்தை பருவமடைந்த பின்னரே பெண்ணாக மாறுகிறார்.நம் அம்மா பாட்டி காலத்தில் 14,15 வயதை கடந்த பின்னரே பெண்கள் பூப்படைந்தனர்.
ஆனால் இக்காலத்தில் 6,7,8 வயதிலேயே குழந்தைகள் பூப்படைகின்றனர்.மரபியல் காரணம்,ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் மோசமான வாழ்க்கை முறையால் விவரம் அறியாத சிறு வயதிலேயே குழந்தைகள் பூப்படைவது அதிகரித்து வருகிறது.
சிறு வயதிலேயே பூப்படையும் குழந்தைகளுக்கு மார்ப்க புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.அதேபோல் மற்ற பெண்களை விட விரைவில் பூப்படைந்த பெண்களின்’வாழ்நாள் குறைவு என்று மருத்துவ புள்ளிவிவரங்கள் சொல்கிறது.
குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்படைய காரணம்?
மகாராஷ்டிரா மாநில சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறு வயது குழந்தைக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.சிறுமியின் உடல் அமைப்பு 15 வயது பெண் பிள்ளையை போல் இருந்ததால் அவரது தாய் மருத்துவ நிபுணரை அணுகினார்.அப்பொழுது குழந்தையின் ஹார்மோன் அளவு அவரின் வயதை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிந்த மருத்துவர் இதன் காரணமாகவே குழந்தைக்கு விரைவில் மாதவிடாய் வந்துவிட்டது என்று கூறினார்.
சிறுமியின் வீட்டில் உள்ள கொள்கலனில் பூச்சிக்கொல்லி மருந்து இருப்தாகவும்,அச்சுறுமி இந்த பூச்சிக்கொல்லி மருந்து உள்ள கலனை சுற்றி விளையாடுவது வழக்கம் என்று அவரது தயார் மருத்துவரிடம் தெரிவிக்கிறார்.இந்த பூச்சிக்கொல்லி மருந்தும் ஹார்மோன் மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர் கூறுகிறார்.
அதேபோல் இப்பொழுது உள்ள குழந்தைகள் பிராய்லர் சிக்கனை விரும்பி உண்கின்றனர்.இதுவும் சிறு வயதிலேயே ஹார்மோன் சுரப்பை அதிகரித்து விரைவில் மாதவிடாய் வர வழிவகுக்கிறது.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் குழந்தைகளின் உடல் எடை அதிகரித்து சிறு வயதிலேயே பதின் பெண்களை போல் காட்சியளிக்கிறார்கள்.இதுவும்சிறு வயதிலேயே பூப்படைய காரணமாக அமைகிறது.
தற்போதைய காலகட்டத்தில் காய்கறிகளை வேகமாக விளைவிக்க அதிக இரசாயன உரங்கள் மருந்துகள் தெளிக்கப்படுகிறது.அதேபோல் அதிக பால் உற்பத்திக்காக மாடுகளுக்கு ஹார்மோன் பயன்படுத்தப்படுகிறது.இதுபோன்ற உணவுப் பொருட்களால் சிறுமிகளுக்கு முன்கூட்டியே பருவமடைதல் நிகழ்கிறது.