BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. இத்தனை வருடம் இருந்த அரசியல் களமானது மாறி தற்போது புதிய மாற்றத்தை பார்த்து வருகிறது. அந்த வகையில் தற்போது வரை திமுக அதிமுக பாஜக என யாரும் ஒருசேர கூட்டணியை உறுதி செய்யவில்லை. அதிலும் பாஜகவில் அதிமுக இணைப்புக்குப் பிறகு நயினார் பொறுப்பேற்றார்.
ஆனால் அண்ணாமலைக்கு இருந்த மரியாதை இவருக்கு கிடைக்கவில்லை. பின்பு அண்ணாமலைக்கு, மத்தியில் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது என்று கூறி வந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் தொகுதி பொறுப்பாளர் பதவி தான் கொடுக்கப்பட்டது. தற்போது அவர் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டார். அரசியல் பேசும் நெட்டிசன்களோ பல காரணங்களை கூறி வந்தனர்.
டம்மி பொறுப்பு கொடுத்து பாஜக அவரை ஓரங்கட்டி விட்டதாக கூறப்பட்டது. இதனிடையே அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிப்பதாகவும் கமலாலைய வட்டாரங்கள் அசை போட்டனர். இத்தனை விமர்சனங்களுக்கும் அண்ணாமலை முற்றுபுள்ளி வைக்கும் விதத்தில் நான் தனியாக போட்டியிடவில்லை, மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் நாங்கள் ஒற்றுமையுடன் அன்பாக இருக்கிறோம் என கூறினார்.
இதனிடையே கமல்ஹாசன் நிர்மலா சீதாராமன் இடையே பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குவாதம் குறித்து பேசியுள்ளார். அதில் கமலஹாசன் நல்ல நடிகர் அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் கிடையாது, ஆனால் மாநிலங்களவையில் புரியாமல் பேசியுள்ளார். நிர்மலா சீதாராமன் அம்மையார், தமிழை பற்றி அநாகரீகமாக மற்றவர்கள் பேசுகிறார்கள் என்று கூறியதை தவறாக புரிந்து கொண்டார். கமல்ஹாசனுக்கு அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும்போது அதனை திருத்திக் கொள்வார்.
தமிழ்நாட்டிற்கு உழைக்க வேண்டும் என்ற முனைப்போடு ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது தவறான கருத்துடைய குற்றத்தை சுமக்க நான் விரும்பவில்லை எனக் கூறியுள்ளார். அண்ணாமலை பொறுப்பிலிருக்கும் போது இருந்த பேச்சு முனைப்பு தற்போது இல்லை. இவையனைத்திற்கும் பாஜக தான் காரணம் என்றும் விருப்பமில்லாமல் கடமைக்கு கட்சியில் இருப்பதாக தெரிகிறது என அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.