கடந்த சில வருடங்களாக பரோட்டா,பிரியாணி போன்ற உணவுகளை உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.தினமும் பரோட்டா,பொரிச்ச கறி,சிக்கன் ரைஸ்,பிரியாணி போன்ற உணவுகளை தேடி உண்கின்றனர்.
குறிப்பாக மைதாவால் தயாரிக்கப்படும் பரோட்டாவை விரும்பி சாப்பிடுபவர்கள் அதிகம்.நெய் பரோட்டா,பன் பரோட்டா,கிளி பரோட்டா,கொத்து பரோட்டா என்று வித வித பரோட்டாக்கள் ஹோட்டல்களில் கிடைக்கிறது.
பரோட்டா சாப்பிட ருசியாக இருந்தால் இதனால் உடலுக்கு எந்த ஒரு ஆரோக்கிய நன்மைகளும் கிடைப்பதில்லை என்பது தான் நிருபிக்கப்பட்ட உண்மை.மைதாவால் செய்யப்படும் பரோட்டாக்களில் நார்ச்சத்து என்ற ஒன்று கிடையாது.இந்த உணவுகளை சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் உள்ளிட்டவை ஏற்படும்.
தொடர்ந்து பரோட்டா சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடிவிடும்.எனவே சர்க்கரை நோயாளிகள் பரோட்டா சாப்பிடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும்.
பரோட்டா சாப்பிட்டால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.பரோட்டாக்கள் எண்ணெயில் பொரித்தெடுக்கும் உணவு என்பதால் இதை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.
அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் இருந்தால் விரைவில் இதயம் தொடர்பான பாதிப்புகள் உண்டாகிவிடும்.இன்றைய தலைமுறையினர் இதயம் தொடர்பான பாதிப்புகளை சந்திக்க முக்கிய காரணம் மைதா உணவுகள் தான்.எனவே வாய் ருசிக்காக இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி வாழலாம்.