சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழகத்தில் இருக்கக்கூடிய எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியினுடைய கொடிகள் மற்றும் தலைவர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதை ஏற்க முடியாது என தெரிவித்திருக்கிறது.
அதிமுக பிரமுகர் முத்துகிருஷ்ணன் அவர்கள் மதுரை உயர் நீதிமன்ற கிளையில், திருவாரூர் குடவாசல் சாலை பகுதியில் இருக்கக்கூடிய நாச்சியார் கோவில் குளக்கரை பகுதிக்கு அருகில் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட எம்ஜிஆர் சிலை இருப்பதாகவும் அதனை அமைத்த பொழுதிலிருந்தே அந்த சிலையால் பொது மக்களுக்கு போக்குவரத்துக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தன்னுடைய மனதில் குறிப்பிட்டவர் திடீரென கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை துறை பொறியியல் பிரிவு அதிகாரிகள் அந்த எம்ஜிஆர் சிலை மற்றும் அதன் அருகில் இருக்கக்கூடிய கட்சி கொடியை அகற்ற வேண்டும் என நோட்டஸ் அனுப்பியதாக தெரிவித்திருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகரான முத்துகிருஷ்ணன் அவர்கள் எம்ஜிஆர் சிலையை அகற்றக் கூடாது என அதிமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மனுக்கள் கொடுத்திருக்கிறார். மேலும் அதில் தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்த எம் ஜி ஆர் அவர்களின் சிலையை தன்னிச்சையாக அகற்றக் கூடாது என்றும் எம்ஜிஆர் சிலை அகற்றப்படுவதால் மக்கள் வருத்தமடைய நேரிடும் என்றும் தன்னுடைய மனுவில் தெரிவித்திருக்கிறார். எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு சிலை மற்றும் அதன் அருகில் இருக்கக்கூடிய அதிமுக கொடியை அகற்ற வழங்கிய நோட்டீசை திரும்ப பெற வேண்டும் என மனுதாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி நிஷா பானு மற்றும் நீதிமதி ஸ்ரீமதி இருவரும் கட்சிக் கொடிகள் மற்றும் தலைவர்களின் உடைய சிலைகள் பொது இடங்களில் நிறுவக்கூடாது என்றும் அவரவருடைய கட்சி அலுவலகத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதானே ?? என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கின்றனர். மேலும் இதற்கு மேல் எந்த கட்சியாக இருந்தாலும் சரி அவரவருடைய கொடிகள் மற்றும் சிலைகளை பொது இடங்களில் நிறுவக்கூடாது என உத்தரவிட்டிருக்கின்றனர்.