திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், கோடிகணக்கில் பணத்தை குவித்து வைத்து மாவட்டச் செயலாளர்களை விலைக்கு வாங்கி வருவதாகவும், கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வருவதாகவும், கட்சி நிதியை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நான் கட்சிப் பொருளாளராக பொறுப்பேற்றபோது ரூ. 2 கோடி பற்றாக்குறையாக இருந்தது. அதன்பின் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலுடன் ரூ. 253 கோடியாக நிதி இருப்பை உயர்த்திக் காட்டினேன். அந்த கட்சியின் நிதியை வைத்துகொண்டு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிக்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த நிதியை தவறாக பயன்படுத்தியது குறித்து உரிய விசாரணை நடத்தி, நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.