பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்!

Photo of author

By Rupa

பயணிகள் நிழற்கூடம் ஆக்கிரமிப்பு! வெயிலில் அவதிப்படும் பொதுமக்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலைய பகுதியில் உள்ள பயணிகள் இருக்கைகள் சிதைந்து உள்ளதால் பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் நிழலுக்காக அருகிலுள்ள நிழற்குடையில் அமர்கின்றனர்.

ஆனால் அந்த நிழல் குடையைசமூக விரோதிகள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு மது, கஞ்சா உள்ளிட்டவைகள அருந்தி விட்டு மது பாட்டில்களை தூக்கி வீசுவதால்,பெண்கள் குழந்தைகள் மிகுந்த அச்சத்தில்உள்ளனர்.

மேலும் சமூக விரோதிகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக பேசி வருவதோடு, பைக்ரேசில் ஈடுபடுவதால் பல்வேறுவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மேலும் சிலர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியில் மேல்புறத்தில் ஏறி நின்றுகொண்டு பிரச்சனை செய்வதோடு கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி எறிகின்றனர்.

நீர்த்தேக்கத் தொட்டியின் அருகிலேயே நூலகம் பள்ளிக் கல்வித்துறை அலுவலகம் நியாய விலைக்கடைகள் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர்.

ஆகவே மேற்படி பகுதியில் காவல்துறை, நகராட்சி நிர்வாகம் வருவாய்த் துறையினர் இணைந்து ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு அச்சுறுத்த ஏற்படுத்தும் சமூக விரோதிகள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நகரச் செயலாளர் ரமேஷ் தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார்,வட்டாட்சியர் ராணி,நகர்மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் இடத்தில் மனு அளித்தார்.