தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை அதிகரிக்க போக்குவரத்து கழகத்தின் சார்பில் சில முக்கிய மாற்றங்கள் மற்றும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி முன்பதிவு செய்து பயணிக்க கூடிய பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதாவது தனியார் பேருந்துகளை விடுத்து தமிழக போக்குவரத்து கழகத்தின் கீழ் செயல்படக்கூடிய பேருந்துகளில் முன்பதிவுகளை செய்து பயணம் மேற்கொள்ளக்கூடிய பயணிகளுக்கு குழுக்கள் மூலமாக பரிசு பொருட்கள் வழங்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது 12% முன்பதிவானது கூடியுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பேருந்துகளில் பயணிப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருவதாகவும், முன்பதிவு மேற்கொள்வதற்கு ஏதுவாக IRCTC பேருந்துகளின் டிஜிட்டல் வர்த்தகத்திற்காக இணைய மற்றும் திறந்தவெளி சேவைகளை அதிகரிக்க இருப்பதாகவும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி இ சேவை மையங்களில் மக்கள் பேருந்துகளுக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.