பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா-தமிழக முதல்வர் ஸ்டாலின் மரியாதை.!!

0
154

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச்சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகில் உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்டோபர் 28-ல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில், நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மீக விழா தொடங்கியது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114-வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, அவருடன் தமிழக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். அதன் பின்னர் சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்குள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செய்ய உள்ளார்.

Previous articleபட்டாசு உற்பத்தியாளர்களின் நினைப்பில் மண்ணை போட்ட உச்சநீதிமன்றம்!
Next articleகடும் தட்டுப்பாட்டால் இறக்குமதி பாதிப்பு! பற்றாக்குறையால் உலகமே பாதிக்கலாம்!