கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம்?

Photo of author

By Pavithra

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக உள்ள நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை கட்டிடங்கள் போதுமானதாக இல்லை.இதனால் சில பள்ளிகள் கல்லூரிகள் சிகிச்சைக்கான வசதிகள் செய்யப்பட்டு அங்கு தொற்றுப் பாதித்தவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் கொரோனாத் தொற்று மற்றும் அறிகுறிகளுடன் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களளை மருத்துவ கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெற்று வரும் சிலர் நேற்று சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளோம்.அடிப்படை வசதிகள் ஏதும் எங்களுக்கு சரி வரை வழங்கப்படவில்லை.இது மட்டுமின்றி உணவு முறையாக வழங்கப்படுவதில்லை. எங்களில் சிலர் குணமடைந்து 10 நாட்களுக்கு மேலாகியும் வீட்டிற்கும் அனுப்பாமலும் அடிப்படை வசதி செய்து தராமலும் அடைத்து வைத்திருக்கின்றனர் என்று மறியலில் ஈடுபட்டோர் கூறினர்.

இவர்களிடம் அங்கிருந்த போலீசார்கள் மற்றும் மருத்துவர்கள் முறையாக உணவு வழங்கப்படும் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் அனைவருக்கும் செய்து தரப்படும் மேலும் குணமடைந்தவர்கள் விரைவில் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே மறியலில் ஈடுபட்டோர் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் சென்றனர்.