நோயாளிகளுக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும்..அட்ராசிட்டியை தொடங்கிய மதுரை எய்ம்ஸ் வடமாநில மாணவர்கள்..!!
கடந்த 2015 – 2016 ஆம் ஆண்டில் மத்திய அரசு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதாக மிகவும் பெருமையுடன் அறிவித்தது. இதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியே நேரடியாக மதுரை வந்து அடிக்கல் நாட்டி விட்டு சென்றார். ஆனால் 5 ஆண்டுகளாகியும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்தபாடில்லை.
இதற்கிடையில் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் பெயரில் சேர்க்கப்பட்ட வடமாநில மாணவர்கள் விடுத்துள்ள சில கோரிக்கைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வடமாநில மாணவர்கள் சிலருக்கு இங்கு அட்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் முடியவில்லை.
எனவே ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எய்ம்ஸ் வடமாநில மருத்துவ மாணவர்கள் தங்களிடம் வரும் தமிழக நோயாளிகள் ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கி உள்ளார்களாம்.
மேலும், தங்களை ஹோலி பண்டிகை கொண்டாட அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி இங்கு போதுமான வசதிகள் இல்லாததால் தங்களை வேறு எய்ம்ஸ் மருத்துவமனை அல்லது ஜிப்மர் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தியுள்ளனர். இவர்களின் இந்த கோரிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் வடமாநில மாணவர்கள் மருத்துவம் படிக்க தமிழ்நாட்டில் இடம் கொடுத்தால் அவர்கள் நம்மை ஹிந்தி கற்றுக்கொள்ள சொல்வதா? என பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள். இந்த விவகாரம் பெரும் சர்ச்சை மற்றும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.