பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

Photo of author

By Sakthi

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!!! அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!!!

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வேலைக்கு தகுந்த சம்பளம் அதாவது சம வேலைக்கு சம அளவிலான ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பல வகையான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று வகையிலான ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்பழகனார் வளாகத்தில் தொடர்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திரைப்படத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் இன்று(அக்டோபர்4) ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் “இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டு அரசுக்கு எடுத்துரைக்க மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது. மூன்று பேர் கொண்ட குழு மூன்று மாதத்திற்குள் இறுதி செய்யப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்படும்.

ஆசிரியர்களுக்கான டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் பணியில் சேர்வோருக்கு உச்ச வயதை உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம். அதன்படி பொதுப் பிரிவினருக்கு 53 ஆகவும், இதர பிரிவினருக்கு 58 ஆகவும் உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம். 171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையான ஊதிய விகிதத்திற்கு கொண்டு வருதல் தொடர்பாக அரசாணை விரைவில் வெளியிடப்படும்.

பகுதிநேரமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியம் 12500 ரூபாயாக உயர்த்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. காப்பீடு செலுத்துவதற்கான தொகையை அரசு ஏற்கும். எனவே இதை ஏற்று போராட்டத்தில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.