உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை இந்த லிங்க் மூலம் செலுத்தவும்!! மோசடிக்காரர்களின் புதிய முயற்சி.. பறிபோன 4.60 லட்சம்!!

Photo of author

By Gayathri

ஆன்லைன் மூலமாக பல்வேறு வகையில் மோசடிகள் நடைபெற்று வரும் நிலையில், சைபர் கிரைமும் மக்களை விழிப்புணர்வோடு வைத்துக் கொள்ள பல அறிவுரைகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள ஒருவருக்கு மின்கட்டணம் செலுத்தவில்லை என்று ஏமாற்றி லிங்க் அனுப்பி ரூ.4½ லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கோட்டூர் கார்டன் பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரின் செல்போனுக்கு லிங்க் ஒன்று வந்திருக்கிறது. அதில் உங்கள் வீட்டினுடைய மின்கட்டனமானது செலுத்தப்படவில்லை என்றும் இந்த லிங்கின் மூலம் உங்களது மின்கட்டணத்தை செலுத்தவும் இல்லை என்றால் உங்கள் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை உண்மையான நம்பிய ராஜசேகரன் லிங்கின் உள்ளேச் சென்று பார்த்திருக்கிறார்.அடுத்த சில நிமிடங்களிலேயே ராஜசேகரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வரவே தன்னுடைய வங்கி கணக்கை சரிபார்த்து இருக்கிறார்.

தன்னுடைய பணம் பரிபோனதை அறிந்த ராஜசேகரன் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.அந்தப் புகாரின் படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பு :-

சைபர் கிரைம் பொதுமக்களுக்கு இதுபோன்ற மோசடி கும்பல் ஏமாற்றி வருவது குறித்து ஏற்கனவே பலமுறை பல அறிவுரைகளை தெரிவித்திருந்த நிலையில் மீண்டும் மீண்டும் இவ்வாறு நடைபெறுவது மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்பதை கூறுவதாக அமைந்திருக்கிறது.