வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட் போன் அடிப்படையில் கட்டண வசூல்!! ஊபர், ஓலா நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு!!

Photo of author

By Gayathri

சமீபகாலகமாவே ஆண்ட்ராய்டு போன் பயனர்களின் கட்டணத்தை விட மற்றும் ஐபோன் பயணங்களில் கட்டணமானது மிக அதிகமாக உள்ளது என்ற சர்ச்சை தொடர்ந்து எழுந்து வந்திருந்தது. ஊபர், ஓலா போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் போக்குவரத்து துறையில் உள்ளனர். அதன்படி வாடிக்கையாளர்களின் மொபைல் ஆண்ட்ராய்ட் ஆக இருந்தால் அதற்காக ஒரு கட்டணமும், ஐபோனாக அமையுமாயின் அதற்கென்று தனி கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்துள்ளன. இது உணவு ஆர்டர் செய்யும் ஆப்புகளிலும் இந்த மாற்றங்கள் நிலவுவதை சமீப காலமாக பயனாளர்கள் நோட் செய்து வருகின்றனர். ஒன்றிய அரசிடம் இதற்காக புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு துறை இதனை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளது. மேலும், பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஜனவரி 23 தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) மூலம் இரு நிறுவனங்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போனின் அடிப்படையில் கட்டணம் வசூல் செய்வது முற்றிலும் குற்றம். மேலும், கட்டண வசூல் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் பதிவிட்டிருந்தார்.