பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி!

0
264
#image_title
பிடிஆர் ஆடியோ 2 ! அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய போது, பிடிஆர் குறித்து வெளியான இரண்டாவது ஆடியோ தொடர்பாக பதிலளித்து பேசியது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அதிமுக ஆட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் டெண்டர்களை கோரி உள்ளனர் என சிஏஜி தெரிவித்துள்ளது. நேர்மையான ஒப்பந்ததாரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை தவிர்க்க பல்வேறு முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறையிலும் முறைகேடு நடந்துள்ளது.
கடந்த அதிமுக அரசில், இலவச லேப்டாப் திட்டத்தில் 68.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; காலணி வழங்கும் திட்டத்தில் 5.4 கோடி வீண் செய்யப்பட்டுள்ளது. 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதிமுக அரசு முறைகேடு செய்துள்ளது.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட பிடிஆர் ஆடியோ 2 குறித்த தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தான் இன்னும் அந்த ஆடியோவை முழுமையாக கேட்கவில்லை, ஏற்கனவே வெளியிட்ட ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
இதனிடையே மீண்டும் இன்று (நேற்று) இரண்டாவது என அண்ணாமலை வெளியிட்டுள்ளார். மேலும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது ஊரில் இல்லை, அவர் இங்கு வந்தவுடன் நீங்களே அவரிடம் கேட்கலாம், அவரும் உங்களை நிச்சயமாக சந்தித்து பேசுவார் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
Previous articleபிளஸ் டூ ரிசல்ட் தேதி அறிவிப்பு! மாணவர்கள் எதிர்பார்ப்பு!
Next articleமாஸ் காட்டும் முதல்வர்! அசத்தலான அறிவிப்பு!