பிளஸ் டூ ரிசல்ட் தேதி அறிவிப்பு! மாணவர்கள் எதிர்பார்ப்பு!

0
128
#image_title
பிளஸ் டூ ரிசல்ட் தேதி அறிவிப்பு! மாணவர்கள் எதிர்பார்ப்பு.
கொரோனா தொற்று காரணமாக பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே ஊரடங்குக்குப் பிறகு ஒட்டுமொத்த தமிழகமும் மீண்டதை அடுத்து, கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வழக்கமான தேர்வு காலத்தில் தொடங்கி நடைபெற்றன. இந்த ஆண்டு 12ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கிடையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்களும், ஆங்கில மொழி தேர்வை 45,000 பேரும், இயற்பியல், பொருளியல் பாடங்களை 47,000 பேரும் எழுதாமல் இருந்தது, தமிழக கல்வியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இது குறித்து தமிழக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் கல்வி அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது‌.
இதனிடையே 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய பல மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 5-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவித்த நிலையில், வரும் 7-ம் தேதி நீட் பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளதால் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு 5-ம் தேதி வெளியாகும் தேர்வு முடிவுகள் பாதிப்பினை ஏற்படுத்தும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வரும் 8-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அன்று காலை சரியாக 9-30 மணியளவில் வெளியிடப்படும் என்றும், மேலும் மாணவ மாணவிகள் பள்ளியில் கொடுத்துள்ள செல்போன் எண்ணிற்க்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.