ஆடியோவில் சிக்கிய பி.டி.ஆர் – திமுக தலைமைக்கு வந்த அடுத்த சிக்கல்
திமுக நிதி அமைச்சர் தியாகராஜனும், திமுகவும் ஒரு பிரச்சனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் பி.டி.ஆர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆடியோவை, சமூக வலைத்தளத்தில் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் பி.டி.ஆர் “ கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசன் சேர்ந்து 30 ஆயிரம் கோடி சேர்த்துள்ளார்கள்.
இவர்களது தந்தையோ, தாத்தாவும் கூட இவ்வளவு சம்பாதிக்கவில்லை. இந்த பணம் எப்படி வந்தது, அதை இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள். என்று அந்த ஆடியோவில் பேசியிருக்கிறார்.
இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் பதிவான பின்னும் கூட, பி.டி.ஆர். அமைதியாக இருந்தது திமுக தொண்டர்களுக்கு வேதனை அளித்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் எம்.எல்.எ பாலாஜியின் மனைவி சர்மிளா ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
“ஆடியோ விவகாரத்தில் நீங்கள் மௌனம் கொண்டால், உங்கள் மீது வைத்த நம்பிக்கை பொய் ஆகிவிடும். தமிழக அரசிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்” என ட்விட் செய்து. பழனிவேல் தியாகராஜனை டேக் செய்துள்ளார்.
அதற்கு சவுக்கு சங்கரும் கமெண்ட் செய்துள்ளார் “ அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனுக்கும், ஒரு பத்திரிக்கையாளருக்கும் ஏற்பட்ட பிரச்சனை அல்ல, நான்கு வருடங்களாக அனைவரும் ஸ்டாலினிடம் கேட்பது இதைத்தான்.
அமைச்சர் கூறியது உண்மை என்றால், ஸ்டாலின் பி.டி.ஆரை பதவியிலிருந்து நீக்கி சரியான தண்டனை கொடுக்க வேண்டும். அதற்கு ஸ்டாலினிற்கு தைரியம் இருக்கிறது என்று சவுக்கு சங்கர் கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்த ஆடியோ விவகாரத்தில் அமைச்சர் அமைதியாக இருப்பது, ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, பேசு பொருள் ஆகியுள்ளது.