பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!!

Photo of author

By Preethi

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!!

Preethi

Pegasus cell phone spy affair !! Opposition parties struggle !! Mamta Banerjee sets up team to probe

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம்!! எதிர்க்கட்சிகள் போராட்டம் !! மம்தா பானர்ஜி குழுவை அமைத்து விசாரணை!!

பெகாசஸ் செல்போன் உளவு விவகாரமானது சில நாட்களாக பெரும் சர்ச்சையில் உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கடட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில் இந்த விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். இஸ்ரேல் நாட்டில் உருவான  பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளைப் பயன்படுத்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், மத்திய மந்திரிகள் உள்ளிட்ட 300 முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை ஒட்டு கேட்கப்பட்டதாக  தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த செல் போன் உளவு புகார்களை மத்திய அரசும், பா.ஜ.க.வும் மறுத்து வருகின்றனர். ஆனாலும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கத்தில்  உள்ளது. இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே மம்தா பானர்ஜி அவர்கள் பேசியதாவது: கைபேசியில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ மூலமாக இந்த உளவு பார்க்கும் வேலை நடைபெறுகிறது. எனவே நான் எனது செல்போனில் கேமரா பகுதியை டேப் போட்டு மூடி வைத்துள்ளேன் என தனது கைப்பேசியை உயர்த்தி காட்டி கூறினார்.

மேலும் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் இந்த பாஜக அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மாநிலத்தில் பெகாசஸ் செல்போன் உளவு விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.வி. லோகூர் மற்றும் ஜோதிர்மாய் பட்டச்சாரியா ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்து உள்ளார்.