ஒலிம்பிக் கிராமத்தில் மீண்டும் கொரோனா! அதிர்ச்சி அடைந்த உலகம்!

0
98
Corona back at the Olympic Village! Shocked world!
Corona back at the Olympic Village! Shocked world!

ஒலிம்பிக் கிராமத்தில் மீண்டும் கொரோனா! அதிர்ச்சி அடைந்த உலகம்!

கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையும் தன் வசப்படுத்தி கொண்டு பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு தீர்வாக மத்திய , மாநில அரசுகள் என்னதான் தடுப்பூசிகளை பரிந்துரைத்தாலும், அது தற்காலிக தீர்வாகவே உள்ளது. கொரோனா மக்களை விடுவேனா என்று ஆட்டி படைக்கின்றது.

கொரோனா பரவலின் காரணமாக கடந்த வருடமே நடக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாமல், தள்ளி வைக்கப்பட்டது. அப்படி தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் இந்த வருடம் நடத்தலாம் என திட்டமிட்ட நிலையில், கொரோனா பரவலுக்கு இடையே மிகுந்த பாதுகாப்போடு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.

அது போல் பாதுகாப்பு கருதி இந்த முறை ஒலிம்பிக் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல், வீரர்கள், பயிற்சியாளர்கள், கமிட்டியினர், வீரர்களின் தனிப்பட்ட பாதுகாவலர்கள், மட்டுமே இந்த முறை ஒலிம்பிக் கிராமத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் என்னதான் பாதுகாப்புகளை பின்பற்றினாலும் நான் உங்களை விட மாட்டேன் என அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இத்தனை பாதுகாப்புக்கு மத்தியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தாலும் கூட தொடர்ந்து பல்வேறு வீரர், வீராங்கனைகள் கொரோனா காரணமாக ஒலிம்பிக் மைதானத்தில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முதலில் இரண்டு பேருக்கு ஆரம்பித்த கொரோனா இப்போது படிப்படியாக வளர்ந்து கொண்டே போகிறது.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கோரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 என அதிகரித்தும் உள்ளது. இதனிடையே நெதர்லாந்து பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால்  துடுப்பு படகு அணி தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளது.