வாகனங்களில் இதெல்லாம் இருந்தால் அபராதம்.. தமிழக அரசிடம் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!!

Photo of author

By Rupa

வாகனங்களில் இதெல்லாம் இருந்தால் அபராதம்.. தமிழக அரசிடம் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!!

சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் இயங்கும் பைக் மற்றும் கார்களில் எந்த ஒரு ஸ்டிக்கரும் ஒட்டக்கூடாது என்ற விதிமுறையானது அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்கள் மருத்துவர்கள் என அனைவரும் தங்களுக்குரிய லோகோவை ஸ்டிக்கராக ஒட்டும் பட்சத்தில் காவல்துறை சோதனை செய்யும் பொழுது அவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.இவ்வாறு இருந்த நிலையில் குற்றம் செய்பவர்களும் பிரஸ், டாக்டர், போலீஸ், என்ற ஸ்டிக்கரை ஒட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் பல குற்றவாளிகள் தப்பிக்க நேரிட்டது மட்டுமின்றி இது குறித்து புகாரும் வந்த வண்ணமாகவே இருந்தது. தனையெல்லாம் தடுக்கவே இனி தனியார் வாகனங்களில் தங்களது பணி குறித்த ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது என்று உச்ச  நீதிமன்றம் ஆணையிட்டது.மேலும்  சென்னை மாநகர காவல் துறை ஆணையர் வழிகாட்டுதல் படி அபராதமும் விதிக்கப்பட்டது.இதனை ஏற்காத டாக்டர்கள் சங்கம் இது குறித்து சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனு அளித்தது.இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று, மருத்துவர்கள் மட்டும் ஸ்டிக்கரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற இடைக்கால அனுமதியும் வழங்கப்பட்டது.

மேலும் தனியார் ஊடகங்களில் ஸ்டிக்கர் ஒட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்தும் தற்பொழுது வரை சாலைகளில் அவ்வாறான வாகனங்கள் இருக்க தான் செய்கிறது. அதேபோல கட்சி கொடிகளும் கட்டப்படக்கூடாது என்று விதிமுறை இருந்தும் அவைகளும் அப்படியே தான் உள்ளது.இதற்கு எதிராக தற்பொழுது வரை தமிழக அரசு என்ன நடவடிக்கைகளை செய்துள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி சுங்க சாவடிகளில் அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனி பாதை அமைக்கப்பட்டும் அதுவும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை.

மேலும் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட சாலை விபத்துக்கள் நடைபெறுவதையொட்டி இது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும் என்றும் கூறினார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக அரசு வழக்கறிஞர் கூறியதாவது, தங்களது பணியை குறித்த ஸ்டிக்கர்கள் தனியார் வாகனங்களில் ஒட்டப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். தற்பொழுது வரை காவல்துறையை அதிகாரிகள் அபாரதாம் விதித்து பெற்று வருகின்றனர்.

மேற்கொண்டு கொடிகள் கட்டப்பட்டாலும் அதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.மேற்கொண்டு இந்த வழக்கை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.