அத்தியாவசியமற்ற பொருட்கள் இருந்தால் 100 ருபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம்!! தமிழக அரசு அதிரடி!!

Photo of author

By Jayachithra

டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுவானது நல்ல தண்ணீரிலே முட்டை இடும் என்ற காரணத்தினால், அத்தியாவசிய மற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். இல்லை எனில், அதன் மூலமாக கொசுவின் உற்பத்தியானது அதிகரித்து கொண்டே இருக்கும்.

அவ்வாறு அதிகரிக்கக் கூடாது என்ற காரணத்தினால் அனைவரையும் அத்தியாவசியம் அற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தண்ணீர் தேங்கியதால் கொசு வளர்வது கண்டறியப்பட்டால், கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மேலும், அதன்படி வீடுகளுக்கு 100 முதல் 200 ரூபாய் வரையிலும் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 500 முதல் 15 ஆயிரம் வரையிலும், சிறிய கடைகளுக்கு 500 முதல் 5 ஆயிரம் வரையிலும் அபராதம் வசூலிக்கப்படும்.

மேலும் இதனை அடுத்து, அதேபோல் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையிலும், நட்சத்திர ஓட்டல்களுக்கு 5 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையிலும் மற்றும் மருத்துவமனைகளுக்கு 25 ஆயிரம் முதல் 10 லட்சம் வரையிலும் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைவரும் தேவையற்ற பொருட்களை உடனடியாக அப்புறப் படுத்திக் கொண்டு அபராதத்தில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில், பெட்ரோல் விலை அதிகமாகி முன்பே மக்கள் அவதிப் பட்டு வருவதுஅடுத்து பின்பு அபராதம் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர் என்று கூறப்படுகிறது.

எனவே, அனைவரும் தேவையற்ற பொருட்களை வெகுவாக அப்புறப்படுத்தி வைரஸ் தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும்.