நேற்று நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாள் இதனையொட்டி பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். நடிகர் லாரன்ஸ் தன்னுடைய பிறந்தநாள் பரிசாக தன்னுடைய மாற்றம் அறக்கட்டளை சார்பில் விதவை பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கியுள்ளார்.
இந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இவரது அடுத்தடுத்து படத்தின் இயக்குனர்கள் அவர் புதிய படங்களில் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போன்ற போஸ்டர்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிப்பிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் இணையவுள்ளார். பென்ஸ் திரைப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நேற்று வெளியாகியிருந்தது.
நேற்றைய தினம் இந்த திரைப்படத்தின் வீடியோ வெளியானது இந்த வீடியோ வில் அதை உறுதிப்படுத்தும் வகையில் லோகேஷ் கனகராஜ் க்ளிம்ப்ஸ் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய LCU வில் தங்களை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.பாக்யராஜ் கண்ணன் இயக்கம் இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்குவாட் இதற்கு முன் விஜயகுமார் நடிப்பில் ஃபைட் கிளப் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதை தொடர்ந்து இந்த திரைப்படத்தினை இயக்குவதுடன் இத்திரைப்படத்திற்கு கதையும் எழுதியுள்ளார்.