ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
செய்தி துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுத்த பலருக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலாக பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 250 ஆக இருந்த நிலையில், தற்பொழுது படிப்படியாக அதிகரித்து ரூ 10000 ஆக வழங்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது நடந்த மாநில கோரிக்கையில் பத்திரிக்கையாளர்களுக்கு ஓய்வூதியம் ஆனது உயர்த்தி வழங்க வேண்டும் என கூறியிருந்தனர். அந்த வகையில் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,000 யிலிருந்து 12000 ஆக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.இதற்கென்றே ரூ 1,58,88,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையை சட்டப்பேரவையில் ஒப்புதல் அளித்த பின்னரே பெறப்படும் எனக் கூறியுள்ளனர்.
இந்த ஒதுக்கீடு தொகையானது எதிர்பாராத செலவின நிதியிலிருந்து வழங்கப்பட உள்ளது.எனவே இது முன் பணமாக வழங்கப்படுகிறது. இந்த செலவீனமானது இதற்கு அடுத்ததாக வரப்போகும் மானிய கோரிக்கையில் சேர்க்கப்பட்டு கணக்கீடு செய்யப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டை பெறுவதற்கு அமைச்சர், எதிர்பாரா செலவீன நிதி விதிகளின் அட்டவணையுடன் சேர்த்து தற்பொழுது தமிழக அரசு கூறியுள்ள அரசாணையை சமர்ப்பிக்கும் படி பத்திரிக்கையாளர் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு இதனை சமர்ப்பிக்கும் பட்சத்தில் இதற்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை வழங்கப்படும் என்றும், கூடிய விரைவில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ரூ 10000 யில் இருந்து 12000 ஆக ஓய்வூதியம் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர்.