மத்திய அரசினுடைய அரசு நிறுவனங்களில் பணிபுரியக்கூடியவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்க கூடியவர்களுக்கு புதிய விதிகளை அறிவித்திருக்கிறது. இந்த புதிய விதிகளின்படி தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் மற்றும் விதி மீறல்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து தவறுகளுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதாவது, ஓய்வூதியம் மற்றும் கிராஜுவேட்டி பெறும் உரிமை பணியில் ஒழுக்கம் மற்றும் செயல்திறன் மீது பொறுப்பாக இருக்கும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-
✓ அலட்சியம் மற்றும் விதிமீறல்கள் – ஓய்வூதியம் மற்றும் கிராஜுவிட்டியில் தடைகளை ஏற்படுத்தும்
✓ பணி ஓய்வு பெற்ற பின்பு விசாரணை நடத்தப்படும் – விசாரணையில் தவறு சுட்டிக்காட்டப்பட்டால் அதுவரை வழங்கப்பட்ட பணம் மீண்டும் பெறப்படும்
✓ மத்திய சிவில் சர்வீஸ் ஓய்வூதிய விதிகள் 2021 – புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
✓ ஏழாவது ஊதிய குழு விதிகள் – ஓய்வூதியம் நிறுத்தப்படும் பட்சத்தில் 9000 ரூபாய் மட்டுமே வழங்கப்படும்
✓ UPSC பரிந்துரை நிலை – ஓய்வூதியம் குறைக்கப்பட வேண்டும் என்றால் யுபிஎஸ்சியிடம் பரிந்துரை பெறுவது அவசியம்.
மத்திய அரச நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு அரசு விடுதி இருக்கக்கூடிய எச்சரிக்கையில் தெரிவித்திருப்பதாவது :-
மத்திய அரசு ஊழியர்கள் பணி புரியும் பொழுது ஏதேனும் அலர்சியம் காட்டப்பட்டாலோ அல்லது தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தாலோ ஓய்வு பெறும் பொழுது அதற்கான விசாரணை நடத்தப்படும் என்றும் அதன் பிறகு ஓய்வூதியம் ஆனது முழுவதுமாக தடை செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்திருக்கிறது. எனவே தங்களுடைய வேலைகளில் எந்தவித அலட்சியப் போக்கும் இல்லாமல் தவறான செயல்களில் ஈடுபடாமல் முறையாக பணிகளை முடித்து ஓய்வு பெறக்கூடியவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற புதிய விதியானது அமல்படுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.