இந்தியாவில் அனைத்து மத்திய மற்றும் மாநில அரசின் ஓய்வூதியதாரர்கள் தங்களது “ஜீவன் பிரமான் பத்ரா” என்று அழைக்கப்படுகின்ற “லைஃப் சர்டிபிகேட்டை” ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் இறுதியில் சமர்ப்பிப்பது அவசியமாக உள்ளது. ஏனென்றால் இந்த லைஃப் சர்டிபிகேட் கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு ஆண்டு மட்டுமே செல்லுபடி ஆகும்.
இந்த ஆண்டு நவம்பர் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படி சமர்ப்பிக்க வேண்டிய தேதியிலிருந்து லைஃப் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஓய்வூதியம் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த சர்டிபிகேட்டை 80 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் அக்டோபர் 1, 2024 யிலிருந்தே சமர்ப்பிக்கத் தொடங்கலாம். மற்றவர்களுக்கு நவம்பர் 1 முதல் தொடங்கியுள்ளது. அரசால் நீட்டிக்கப்படாத வரை சர்டிபிகேட்டை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி நவம்பர் 30 2024 என்று கூறப்பட்டுள்ளது. லைஃப் சர்டிபிகேட் மத்திய ஓய்வூதிய செயலாக்க மையங்களுக்கு வந்த பிறகே பணம் வரத் தொடங்கும்.
லைஃப் சர்டிபிகேட்டை ஆன்லைனில் எடுக்க முதலில் தங்கள் மொபைல் அல்லது பிசியில் ஜீவன் பிரமாண் ஆப்பைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.. இல்லையென்றால் அருகில் உள்ள ஜீவன் பிரமான் மையத்தில் ரெஜிஸ்டர் செய்யலாம். இதற்குத் தேவையான ஆவணங்கள்:
1)ஆதார் எண்
2)பென்ஷன் பேமெண்ட் ஆர்டர்
3)வங்கிக் கணக்கு எண்
4)வங்கிப் பெயர்
5)ஆதார் எண்ணில் ரெஜிஸ்டர் ஆகியுள்ள மொபைல் எண்
பின்பு தங்கள் கைரேகை அல்லது கருவிழி பயோமெட்ரிக்கை வழங்கி தங்களை அங்கீகரிக்க வேண்டும். ஆன்லைன் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கு ஜீவன் பிரமான் தளமானது ஆதார் தளத்தையே பயன்படுத்துகிறது.
ஜீவன் பிரமான் வெப்சைட்டில் தங்கள் ஐடியை வணங்குவதன் மூலம் லைப் சர்டிபிகேட் இன் pdf காப்பியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு அக்னாலேஜ்மென்ட் மெசேஜ் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். அதில் தங்கள் ஜீவன் பிரமான் சான்றிதழ் ஐடியும் இருக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு எளிய முறையில் கிடைக்கும் வகையில் இந்த சான்றிதழ்களானது “ஆயுள் சான்றிதழ் களஞ்சியத்தில்” சேமிக்கப்பட்டிருக்கும். ஜீவன் பிரமான் இணையதளத்திலிருந்து தங்களுடைய லைஃப் சர்டிபிகேட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.