தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஐந்தே தினங்கள் இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அதேபோல திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்mஉள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு.
அதிமுகவை பொறுத்தவரையில் அந்த கட்சியின் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இருக்கிறது.இதேபோல பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி என்று அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை வெகுவாக வரவேற்கபடுகிறது.இந்த சூழ்நிலையில், எதிர்க் கட்சியான திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளியீடு இருக்கின்ற ஒரு சில வாக்குறுதிகள் தமிழகம் முழுவதிலும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அதில் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ரூபாய் 60 ஆயிரம் பணம் மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி மிகப்பெரிய எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது.
அதோடு திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தாக்க போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.இந்த நிலையில்,வேலூர் மாவட்டம் குடியாத்தம் சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். அந்த சமயத்தில் ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் விஸ்வநாதனும் அவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அந்த சமயத்தில் தேவராயபுரம் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்கள் 2 திமுக வேட்பாளர்களையும் தடுத்து நிறுத்தி கலப்புத் திருமணம் தொடர்பான வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கினார்கள். யார் வீட்டுப் பெண்ணை யாருக்கு திருமணம் செய்து வைப்பது இதற்கு நீங்கள் பரிசு கொடுத்து ஆதரித்து விடுவீர்களா ஏற்கனவே நாட்டில் நாடக காதல் செய்து ஒரு கும்பல் பெண்களை சீரழித்து வருகிறார்கள். இதில் இதனை நீங்கள் ஊக்குவிப்பது முறையல்ல என்று தகராறில் ஈடுபட்டார்கள்.
ஒருவேளை உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால் எங்கள் வீட்டுப் பெண்கள் தெருவில் நிற்பதா அவரவர் சமுதாயத்தில் அவரவர் திருமணம் செய்து கொள்வதுதான் எல்லோருக்கும் நல்லது என்று அந்த மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதோடு நீங்கள் தெரிவித்திருக்கும் முறையில் பரிசு கொடுப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
திமுக வேட்பாளர் தரப்பிற்கும் பொதுமக்களுக்கும் இடையில் மிகக்கடுமையான தகராறு ஏற்பட அதன் காரணமாக, அங்கே மோதல் உண்டாகும் சூழ்நிலை ஏற்படத் தொடங்கியது. காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். அதோடு ஒரு சில இளைஞர்களை கைது செய்திருக்கிறார்கள் இதனால் அந்த பகுதி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று முழக்கம் எழுப்பி இருக்கிறார்கள். அத்துடன் வாக்கு கேட்க வந்த திமுகவினர் வாக்கு கேட்காமல் திரும்பிசென்றனர்.