ஒட்டுமொத்த தமிழகத்தையும் கைக்குள் அடக்க பாஜக போட்ட மாபெரும் திட்டம்! உற்சாகத்தில் அதிமுக கூட்டணி!

0
178

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கின்ற 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சியான அதிமுகவும் எதிர்க்கட்சியான திமுகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகம் முழுவதும் அந்த இரு கட்சிகளுமே சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

அதேபோல இந்தத் தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் பாரதிய ஜனதா கட்சி முயற்சிசெய்து வருகிறது. ஆதிகாலம் தொட்டே இன்று வரையில் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். திமுக தோன்றுவதற்கு முன்னர் காங்கிரஸ் கட்சி கூட தமிழகத்திலே ஆட்சி புரிந்தது. அப்போது படிக்காத மேதை என்று அழைக்கப்பட்ட காமராஜர் முதலமைச்சராக இருந்து தமிழகத்தை ஆட்சி செய்தார் என்பதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான்.

ஆனால் தமிழகத்திலே திமுக தொடங்கப்பட்டதிலிருந்து படிக்காத மேதை ஏழைகளின் பங்காளர் என்றெல்லாம் போற்றப்பட்ட காமராஜர் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு திராவிடக் கட்சிகளின் தாக்கத்தால் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் தலை தூக்கவே முடியவில்லை.காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் காமராஜர் இருந்த சமயத்தில் சுமார் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தது அதன்பின்பு அந்த கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விட்டது.ஆனால் பாஜகவை பொருத்தவரையில் இதுவரையில் எந்த ஒரு தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற்ற அனுபவம் அந்த கட்சிக்கு தமிழகத்தை பொறுத்தவரையில் கிடையாது.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தமிழகத்தில் 20 தொகுதிகளில் களமிறங்குகிறது.இந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது எதிர்கட்சியான திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி மிக கடுமையாக விமர்சனம் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் போன்றோர் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை புதுச்சேரி வருகின்றார்.

காலை 10 மணி அளவில் சித்தாந்த கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு அதன்பிறகு லாஸ்பேட்டையில் நடக்கவிருக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இதனையடுத்து பிற்பகல் 12.15 மணி அளவில் திருக்கோவிலூர் செல்லும் அமித்ஷா அங்கே நடைபெறும் தேர்தல் பரப்புரையும் அதன் பிறகு மாலை 4 மணி அளவில் வேலாயுதம்பாளையத்தில் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.