மக்களே எச்சரிக்கை மின்வாரிய ஊழியர்கள் வெளியிட்ட அதிரடி போராட்டம் ! மின்தடை ஏற்படும் தேதி வெளியீடு!
கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்தப்பட்டது.அதற்கு மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.மேலும் இந்த மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது.இந்நிலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் வழங்கப்படும்.
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதியம் உயர்வு அறிவிக்கப்படாமல் இருக்கின்றது.அதனுடன் காலி பணியிடங்களை தாமத படுத்தாமல் உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.அதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசை கண்டிக்கும் வகையில் அடிக்கடி மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த இரண்டாம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலங்களில் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் போது மின்வாரிய ஊழியர்கள் பட்டை நாமம் அச்சிடப்பட்ட பலகை போன்றவைகளை கையில் ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் காலி பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தான் ஜனவரி 10 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதினால் மின் தடை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.மின் தடை ஏற்படுவதினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படையும்.