இந்தியன் ரிசர்வ் வங்கி ஆனது நகைகளை அடகு வைத்திருக்கக் கூடிய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் படி அடகு வைக்கப்பட்டிருக்கக்கூடிய நகைகளை புதுப்பிக்க வேண்டும் என்றால் வட்டியுடன் முழு அசலையும் கொடுத்து அதன் பின்பு தான் மறு அடகு வைக்க முடியும் என அறிவித்திருந்தது.
இந்தியன் ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களிடம் நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர்களிடம் மறு அடகு வைப்பது மற்றும் நகையை புதுப்பிப்பது போன்ற விஷயங்களுக்கு கறார் காட்டி வருவதால் வேறு வழி இன்றி மக்கள் கந்துவட்டியை நோக்கி செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்கள் பெரும்பாலும் விவசாயம் தொழில் மற்றும் மருத்துவ செலவு போன்றவற்றிற்காக தங்களுடைய நகைகளை குறைந்த வட்டியில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் அடகு வைத்து இருந்த நிலையில் தற்போது இந்தியன் ரிசர்வ் வங்கி புதிய விதியால் வேறு வழியில்லாமல் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி தங்களுடைய நகைகளை மீட்டு மறு அடகு வைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய விதியை இந்தியன் ரிசர்வ் வங்கியானது மீண்டும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இது மீட்டர் வட்டி ஸ்பீடு வட்டி போன்ற வட்டிக்காரர்களுக்கு நன்மை பயப்பதாக அமைகிறது தவிர விவசாயிகள் நடுத்தர மக்கள் போன்றவர்களுக்கு இது மிகப்பெரிய கஷ்டத்தையே கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.