மக்களே இங்கு செல்ல இனி இது கட்டாயம்! அரசின் அதிரடி நடவடிக்கை!
கொரோனா தொற்று பாதிப்பானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை கட்டுக்குள் அடங்காமல் பரவி வருகிறது.முதல் அலை,இரண்டாம் அலையை தாண்டி தற்போது மூன்றாவது அலை பெரிய தாக்கத்துடன் காணப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மேலும் மூன்றாவது அலையிலிருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் படியும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த மூன்றாவது அலையில் ஆஸ்திரேலியா தற்போது அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.மருத்துவர்களின் கணக்கின்படி நமது இந்தியாவில் ஒரு நாளில் இந்த மூன்றாவது அலைக்கு மட்டும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படுவர் என கூறியுள்ளனர்.அதனால் இந்தியாவில் அதிக கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.அவற்றின் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிகமாக மூடும் பொறுப்பு அனைத்து மாவட்ட ஆட்சியருக்கு அரசாங்கம் கொடுத்துள்ளது.அந்த வகையில் இரு தினங்களுக்கு முன் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் மக்கள் அதிகம் கூட்டம் கூடியதால் தற்காலிகமாக அச்சந்தை மூடப்பட்டது.
அதனையடுத்து கோயம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் மால்கள் மற்றும் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. மேலும் வரலாற்று சிறப்புமிக்க கோவில் தளங்களும் பல இடங்களில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.அந்த வகையில் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமான ஏற்காடு,அதிக அளவில் மக்கள் கூடுகின்றனர்.இதனை தடுக்க சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காடு வருவதற்கு தடை விதித்துள்ளார்.
அதனையடுத்து இதர நாட்களில் சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல வேண்டும் என்றால் கட்டாயம் ஆர்டி-பிசியார் பரிசோதனை சான்று சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி மக்கள் அதிகளவு சந்தைகளில் கூடுகின்றனர்.கொரோனா பரவலை தடுக்க பல இடங்களில் சந்தைகளை தற்காலிகமாக மூடி வருகின்றனர்.அந்தவகையில் கொங்கணாபுரம் வாரச்சந்தையையும் மூட சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.