அயோத்தியில் ராமர் கோவில் எப்போது திறக்கப்படும் தெரியுமா?

0
57

அயோத்தியில் சுமார் 1,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இது உலகம் முழுவதும் இருக்கின்ற இந்து மக்களின் இடையே எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.இந்தக் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெற்றது இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொண்டு வெள்ளி செங்கல்லை எடுத்து கொடுத்து கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்த கோவில் அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தலைமையில் பொறியாளர்கள், கட்டுமான வல்லுநர்கள், உள்ளிட்டோர் சென்ற மாதம் இரண்டு நாட்கள் கலந்தாலோசித்தார் ராமர் கோவிலை வருகின்ற 2023 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பக்தர்களுக்காக திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதனையடுத்து ராமர் கோவிலில் வழிபாடு நடத்துவதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

அதே சமயத்தில் கோவில் வளாகத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக வரும் 2025 ஆம் ஆண்டு கடைசியில்தான் முடிவுறும் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த கோவிலுக்கான அஸ்திவாரப் பணிகள் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் முடிவடைய இருக்கிறது என தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு இந்த கோவில் மூன்று தளங்கள் 5 குவிமாடங்கள், கோபுரங்கள் 360 தூண்கள் என்று மிக பிரமாண்டமாக உருவாக இருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்படும் சமயத்தில் அது உலக அளவில் மக்கள் அங்கே வருவார்கள் இதற்காக அங்கு அதிநவீன விமான நிலையத்தை உருவாக்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் 224 கோடி ரூபாயை அனுமதித் இருப்பதாகவும், தகவல் கிடைத்திருக்கிறது. இந்த விமான நிலைய மேம்பாட்டுக்காக மாநில அரசு 270 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது என சொல்லப்படுகிறது.