திரையரங்கில் விஜய் டிவி புகழ்  செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திரையரங்கில் விஜய் டிவி புகழ்  செய்த காரியத்தால் மக்கள் அதிர்ச்சி! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாவதில் சிக்கல் நிலவியது. சில மாதம் முன்பு ஓடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் ஜெய் பீம் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படத்தில் வன்னியர் சமூகத்தை ஜாதி வெறியர்கள் போல காட்டியது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் அந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை பெயரில் உள்ள நிலையில் உதவி ஆய்வாளர் அந்தோணிசாமி கதாபாத்திரத்திற்கும் மட்டும் குரு மூர்த்தி என்ற பெயர் மாற்றம் செய்து வைத்திருந்தனர்.

அவர் பெயரை சுருக்கி அப்படத்தில் குரு என்றே அழைக்கப்பட்டார்.அதுமட்டுமின்றி வன்னியர் சங்கத்தின் அடையாளமாக கருதப்படும் அக்னி கலசத்தையும் காவல்துறையினர் வீட்டில் மாட்டியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் சூர்யாவிற்கு பெருமளவு எதிர்ப்பு கிளம்பியது.பல ஏற்திப்புகளை சந்தித்த பிறகு அவ்வாறு வன்னியர் சமூகத்தை சித்தரித்து காட்டியது தவறு என்று இயக்குனர் ஒப்புக் கொண்டார்.பிறகும் சூர்யா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என பல தரப்பினர் கேட்டு வந்தனர்.

ஆனால் சூர்யா பொது மணிப்பு ஏதும் கேட்கவில்லை.அதன் விளைவாக அடுத்தபடியாக தற்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் வெளியே வர பல எதிர்ப்புகள் கிளம்பியது. சூர்யா பொது மன்னிப்பு கேட்டால் மட்டுமே இப்படம் திரையில் வெளியிடப்பட வேண்டும் என்று வன்னியர் சமூகத்தினர் கேட்டு வந்தனர்.அதனால் இப்படம் திரையரங்குகளில் வெளிவருமா என்பது பெரும் சந்தேகமாகவே இருந்தது. அதுமட்டுமின்றி இப்படம் வெளிவருவதை யொட்டி சூர்யாவின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இவ்வாறு இருக்கையில் நேற்று கரூர் மாவட்டத்தில் அஜந்தா என்ற திரையரங்க மேலாளரை சந்தித்து பாமக மாவட்ட சார்பில் , சூர்யா பொது மன்னிப்பு கேட்கும் வரை எதற்கும் துணிந்தவன் படம் திரையிடப்பட கூடாது என்று மனு அளித்தனர். இத்தனை எதிர்ப்புகளையும் தாண்டி இன்று அப்படம் திரையரங்கில் வெளியானது. பெருமளவு ஹாட்ரிக் ஹிட் அடிக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் எதற்கும் துனிந்தவன் படத்தில் நடித்த புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

https://www.instagram.com/p/Ca6MnizFraT/

அதில் எதற்கும் துணிந்தவன் படம் பார்த்துவிட்டு மக்கள் கொடுக்கும் ஆதரவை பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் அதில் கூறியது, பெற்றோர்கள் பிள்ளைகளை பெற்றால் மட்டும் போதாது அவர்களுக்கு எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மேலும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு மக்கள் கொடுத்த இந்த ஆதரவிற்கு நன்றி என்று கூறியுள்ளார். தற்பொழுது இது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

Leave a Comment