மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!!

0
74

மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்! தலைமை தேர்தல் ஆணையர் பேட்டி!!

நேற்று முன்தினம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்வதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது அம்மாநில சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப்பில்லை. தேர்தல் ஆணையம் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடனேயே செயல்படுகிறது.  இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாரணாசியில் வெளியில் எடுத்து செல்லப்பட்டவை பயிற்சிக்காக கொண்டு வரப்பட்ட எந்திரங்களாகும். வாக்குப்பதிவின் போது, ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் மாற்று எந்திரங்களாக உபயோகப்படுத்திட கூடுதலாக சில எந்திரங்கள் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். அந்த எந்திரங்களே கொண்டு செல்லப்பட்டன. இதுகுறித்த  முறையான தகவலை அரசியல் கட்சிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்க அதிகாரிகள் தவறிவிட்டனர்.

எனவே, வாக்குப்பதிவு எந்திரங்களை வெளியில் எடுத்துச்செல்ல வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையில் ஏதாவது சந்தேகம் இருப்பின் கட்சி ஏஜெண்டுகள், தேர்தல் பார்வையாளர்களை அணுகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிகளிலும் ஐந்து விவிபேட் எந்திரங்கள் எண்ணி பார்க்கப்படுவதாகவும், அதனால் முறைகேடு நடைபெற சிறிதும் வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணிக்கையானது, முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடனேயே நடைபெறுகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K