மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா!

மக்களே எச்சரிக்கை! துரத்தி வரும் மெட்ராஸ் ஐ எந்த மாவட்டத்தில் தெரியுமா!

தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையை நாடி செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் இருந்து வந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே தான் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமாக தான் தேர்வு எழுதினார்கள்.

நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். மாணவர்கள் தேர்வுகளை  நேரடியாக சென்று எழுதினார்கள்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை மெட்ராஸ் ஐ என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதன் அறிகுறி கண் வெண்படல அழற்சி ஏற்படும் அதன்பிறகு கண் எரிச்சல் ,கண்ணில் நீர் வடிதல் ,கண் சிவத்தல்,கண் இமைகள் ஒன்றோடு ஓன்று ஒட்டிக்கொண்டு அழுக்குகள் வெளியேறும் ,அதனையடுத்து வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்ணில் கூச்சம் ஏற்படும் இவை அனைத்தும் தான் மெட்ராஸ் ஐ வருவதற்கான அறிகுறிகள்.

இவ்வாறான பிரச்சனைகள் காற்று மாசு காரணமாக ஏற்படுகின்றது.மேலும் மெட்ராஸ் ஐ ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் உபோயோகித்தால் மற்றவர்களுக்கும் அந்த தொற்று ஏற்படும்.மேலும் ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ ஏற்பட்டால் அவை மற்றொரு கண்ணிற்கும் ஒட்டிக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது.

தற்போது சென்னையில் எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கபட்டு தினசரி 50 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.ஆகையால் மெட்ராஸ் ஐ உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் மெட்ராஸ் ஐ ஐந்து நாட்களில் குணமடையும்.ஆனால் அலட்சியம் காரணமாக பார்வை இழப்புகூட ஏற்படும்.

Leave a Comment