மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

Photo of author

By Parthipan K

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்! 

Parthipan K

People beware! Madras eye disease is serious in this district!

மக்களே உஷார்! இந்த மாவட்டத்தில் மெட்ராஸ் ஐ நோய் தொற்று தீவிரம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பள்ளி ,கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது அதனால் மெட்ராஸ் ஐ போன்ற நோய் தொற்றுக்களின் தாக்கம் அதிகளவு இல்லை.

ஆனால் தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில் கண்ணின் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றை  மெட்ராஸ் ஐ என அழைக்கப்படுகின்றது.

இந்த தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் தன்மை கொண்டது.அதன் அறிகுறி கண்ணின் வெண்படலத்தில் அழற்சி, கண் எரிச்சல்,கண்ணில் நீர் வடிதல் ,கண் சிவத்தல் ,கண் இமைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி கொள்ளுதல் ,அழுக்குகள் வெளியேறுதல் மற்றும் வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்ணில் கூச்சம் ஏற்படுதல் போன்றவைகளை தான்.

இவ்வாறான பிரச்சனைகள் காற்று மாசுவினால் ஏற்படுகின்றது. கடந்த வாரம் சென்னையில் அதிகளவு இந்த நோய் தொற்று இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது நாகை மாவட்டத்தில் 78 பேருக்கு மெட்ராஸ் ஐ மற்றும் கண் வலி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் கண் வழியால் பாதிக்கப்பட்டவர்கள் நீச்சல் குளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.