மக்களே எச்சரிக்கை! மீண்டும் படையெடுக்கும் மெட்ராஸ் ஐ!
கொரோனா பரவல் ஒரு பக்கம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக வேகமாக பரவி வருகின்றது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான மக்கள் மெட்ராஸ் ஐ பாதிப்பினால் மருத்துவமனைக்கு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.மெட்ராஸ் ஐ என்பது விழியையும்,இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் தொற்று வைரஸ் ஆகும்.
இந்த பாதிப்பு காற்று மூலமாகவும்,மாசு வாயிலாகவும் பரவும் வாய்ப்புள்ளது.அதுமட்டுமின்றி இந்த மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினாலும் இந்த தொற்று பரவும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.சமீபகாலமாக மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது,
கண் எரிச்சல்,விழிப் பகுதி முழுவதும் சிவந்து காணப்படுதல், நீர் வடிதல், இமை பகுதிகள் இரண்டும் ஒட்டிகொள்ளுதல் போன்றவை தான் முக்கிய அறிகுறியாக காணப்படுகின்றது. மேலும் ஒரு கண்ணில் மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் மற்ற கண்ணிற்கும் அவை பரவ வாய்ப்பு அதிகம்.இதுபோன்ற பாதிப்பு இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என கூறுகின்றனர்.
மேலும் குறிப்பாக எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 25 க்கும் அதிகமாக உள்ளது.அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.மெட்ராஸ் ஐ தொற்றால் பாதிக்கபடுவோர் தங்களை தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் இல்லையெனில் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.