மக்களே எச்சரிக்கை பண பரிவர்த்தனை முழுமையாக பாதிக்க வாய்ப்பு! வங்கிகள் தொடர் விடுமுறை!
மும்பையில் கடந்த 13 ஆம் தேதி வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது அந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தபடுவதாக அறிவித்தனர்.அந்தவகையில் வரும் ஜனவரி 28ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் விடுமுறை அளிக்கபடுவது வழக்கம் தான்.அதனை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.அதனை தொடர்ந்து தான் வரும் ஜனவரி 30,31 அதாவது திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறு நான்கு நாட்கள் வங்கி சேவைகள் முழுமையாக விடுமுறை அளிக்கபட்டால் பண பரிவர்த்தனை சேவைகள் அனைத்தும் முற்றிலும் பாதிக்கப்படும்.கடந்த ஜனவரி 15 ஆம் தேதி தான் பொங்கல் விடுமுறைக்கு நான்கு நாட்கள் விடுமுறை விடப்பட்டது ஒரே வாரத்தில் மீண்டும் நான்கு நாட்கள் விடுமுறை அளித்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகுவார்கள் அதுமட்டுமின்றி தொழில்,வர்த்தக நிறுவனங்கள்,சிறு தொழில் செய்வோர் என பலரும் பாதிப்படைவார்கள்.
மக்கள் ஏ.டி.எம் சேவையை பயன்படுத்தினாலும் அவை முழுமையாக செயல்படும் என்பது கேள்வி குறிதான்.குறிப்பாக வங்கி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் தற்போது வரையிலும் நிறைவேற்றவில்லை.வங்கிகளில் குறைவான அளவில் ஊழியர்கள் பணி புரிவதினால் வாடிக்கையாளரின் சேவை பாதிப்படைகின்றது.அதனால் தான் தேவைகேற்ப ஊழியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் வங்கி தரப்பில் கூறுகையில் சமரச பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைகளுக்கு எந்த உத்தரவாதமும் வழங்கவில்லை.வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்புடன் 15 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்துவதாக இந்திய வங்கிகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது.அதனால் வங்கி ஊழியர்கள் திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.