மக்களே உஷார்.. இவர்களுக்கு கட்டாயம் கொழுப்பு கட்டிகள் வரும்!!
இப்போதைய கால கட்டத்தில் நோய் நொடியில்லாமல் வாழ்வது என்பது நடக்காத ஒன்றாக மாறிவிட்டது.மோசமான உணவு பழக்கங்களால் சில நோய்கள் ஏற்படுகிறது.சில நோய்கள் தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது.ஆனால் எந்த ஒரு காரணமும் ஏற்படும் பாதிப்பு கொழுப்புக்கட்டி.உடலில் கை,கால்,முதுகு,வயிறு,மார்பு,தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ஆங்காகே சிறிய கட்டிகள் தோன்றுவதை கொழுப்புக்கட்டிகள் என்று கூறுகின்றோம்.
இந்த கட்டிகள் எதனால் உருவாகிறது என்ற காரணம் இன்று வரை மருத்துவர்களுக்கு புலப்படாத ஒன்றாக உள்ளது.சிறு கட்டிகளாக இருக்கும் வரை இதனால் ஆபத்துகள்,வலி எதுவும் ஏற்படாது.கொழுப்புக்கட்டியை பெரியதாகமல் இருந்தால் அதை அகற்ற வேண்டியதில்லை.ஆனால் கட்டிகள் மீது வலி ஏற்படுதல்,வீக்கம் உண்டதால்,கட்டிகள் வளர்தல் போன்றவை நிகழ்ந்தால் நிச்சயம் அதனை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட வேண்டும்.
இதுபோன்ற அறிகுறிகளுடன் உள்ள கட்டிகள் புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்தை கொண்டிருக்கிறது.உடலில் கட்டிகள் தோன்றினால் அவை என்ன கட்டி என்பதை மருத்துவ பரிசோதனை மூலம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
கொழுப்பு கட்டியானது தோலிற்கும் திசுக்களுக்கும் இடையில் தோன்றக் கூடியது.கொழுப்புக்கட்டி உருவாவதற்கான உரிய காரணங்கள் கண்டறியப்படவில்லை என்றாலும் பரம்பரை தன்மை,அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள்,நீரிழிவு நோய் இருப்பவர்களின் உடலில் இக்கட்டிகள் உருவாக தூண்டப்படுகிறது.எனவே சாதாரண கொழுப்பு கட்டி என்று அலட்சியம் கொள்ளாமல் அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவது நல்லது.