உடலை சீரக செயல்பட வைக்க தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.தாக்கத்தை தணித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தண்ணீர் உதவியாக இருக்கிறது.தினமும் 10 கிளாஸ் நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தண்ணீர் குடிப்பதை விட அதை எப்படி குடிக்கிறோம் என்பது முக்கியம்.தண்ணீரை இப்படி தான் குடிக்க வேண்டுமென்று சில வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் நின்றபடி தண்ணீர் அருந்துவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.இப்படி இன்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்தால் உடல் ஆரோக்கியம் பாதிப்படைந்துவிடும்.
நின்றபடி தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்:
1)நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதால் ஊட்டச்சத்து இழப்பு ஏற்படும்.
2)நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் இதய ஆரோக்கியம் பாதிப்படைகிறது.
3)நின்றபடி தண்ணீர் குடிக்கும் பழக்கம் தொடர்ந்தால் குடலிறக்க நோய் ஏற்படும்.
4)அதிக மன அழுத்தம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.இதனால் நின்றபடி தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
5)நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் பழக்கம் தொடர்ந்தால் மூட்டு வலி,முழங்கால் வலி ஏற்படும்.
6)நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
7)இப்பழக்கம் தொடர்ந்தால் கீழ் வாதம்,எலும்பு வலிமை இழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.இதனால் உட்கார்ந்த நிலையில் தண்ணீர் குடிப்பதே நல்லது என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.