வீடியோ காலிங் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம்!!

0
136

கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்தக் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி ஏற்பாட்டின் பெயரில் வீடியோ காலிங் மூலம் குறைதீர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கணினி முறையில் முதலில் வந்த 30 நபர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வாரந்தோறும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous articleஎகிப்தில் உள்ள பிரமிடுகளை கட்டியது வேற்றுக்கிரகவாசிகளே: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்
Next articleகொரோனா தோற்று உறுதியான மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்து மற்றொரு மத்திய அமைச்சருக்கு எதிரொலி!!!