மக்களே இந்த விஷயம் தெரிந்தால்.. இனி இஞ்சி தோலை தூக்கி போடமாட்டீங்க!!

Photo of author

By Divya

மக்களே இந்த விஷயம் தெரிந்தால்.. இனி இஞ்சி தோலை தூக்கி போடமாட்டீங்க!!

Divya

நம் உணவின் சுவையை அதிகமாக்கும் பொருளான இஞ்சி உடல் ஆரோக்கியத்திற்கு மாமருந்தாக திகழ்கிறது.சைவ உணவை விட அசைவ உணவுகளில் தான் அதிகம் இஞ்சி சேர்க்கப்படுகிறது.இஞ்சி இல்லாத அசைவ உணவின் சுவை குறைந்துவிடும்.இஞ்சி ஒரு காரத் தன்மை கொண்ட பொருளாகும்.

செரிமானப் பிரச்சனை இருந்தால் ஒரு துண்டு இஞ்சை தட்டி போட்டு டீ செய்து குடித்தால் உணவு செரித்துவிடும்.உடல் எடையை குறைக்க இஞ்சி பெரிதும் உதவியாக இருக்கிறது.இஞ்சியை காய வைத்து சுக்காக பயன்படுத்தினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.வயிறு அசௌகரிய பிரச்சனை இருந்தால் இஞ்சி பானம் தயாரித்து பருகலாம்.

நெஞ்சு கரிப்பு,வாயுத் தொல்லை,பசியின்மை பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சி சாறை தண்ணீரில் கலந்து பருகலாம்.இஞ்சி சாப்பிடுவதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.இரத்த கொதிப்பு பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியின் பானம் தயாரித்து பருகலாம்.

குமட்டல்,வாந்தி பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை இடித்து சாறு எடுத்து பருகி பலனடையலாம்.இப்படி பல நன்மைகள் கொண்டிருக்கும் இஞ்சியை பயன்படுத்தும் பொழுது அதன் தோலை நீக்கிவிடுகிறோம்.ஆனால் உண்மையில் இஞ்சி தோலில் தான் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இஞ்சி தோலில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

இஞ்சி தோலில் உள்ள நன்மைகள்:

1)இஞ்சை தோலுடன் சமைத்து உட்கொண்டால் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும்.

2)இஞ்சியை தோலுடன் இடித்து நீரில் கொதிக்க வைத்து குடித்தால் சளி,இருமல் போன்றவை குணமாகும்.

3)இஞ்சை தோலுடன் பயன்படுத்தினால் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் அதிகரிக்கும்.

4)தோலுடன் இடித்த இஞ்சியை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.