மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!  இந்த பிரச்சனைகளுக்கு  இந்த ஒரு பொருள் தான் தீர்வு!

மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!  இந்த பிரச்சனைகளுக்கு  இந்த ஒரு பொருள் தான் தீர்வு!

முந்தைய காலத்தில் இருந்த சில பழக்கவழக்கங்கள் தற்பொழுது காணாமலே போய்விட்டது. அவற்றில் நாம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களை மாறிப்போய்விட்டது. சிறு சிறு விஷயங்கள் கூட மறந்து வேறு ஒரு உணவு பழக்க வழக்கத்திற்கு மாறி வருகிறோம். அது உடலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கிறது. பின்பு மருத்துவமனையை நாடி செல்கிறோம். நாம் அன்றாடம் சமையலில் உபயோகப்படுத்தும் சில பொருள்கள் அதிகம் நன்மையை விளைவிக்கும்.

அவற்றில் ஒன்றுதான் வெந்தயம். தினந்தோறும் வெறும் வயிற்றில் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை நீரை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். இந்தக் காலக் கட்டத்தில் இருக்கு அது தெரியாமலேயே போய்விடுகிறது. வெந்தயம் அதிக அளவு ஊட்டச் சத்து மற்றும் நார்ச் சத்து நிறைந்த ஒரு பொருள். இப்போ உள்ள அனைவருக்கும் அசிடிடி பிரச்சனை என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. அவ்வாறு பிரச்சனை ஏற்படும் போதெல்லாம் பக்கத்தில் இருக்கும் மருந்து கடைகளுக்கு சென்று ஏதேனும் ஒன்றை வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து விடுகிறோம்.

ஆனால் அது நிரந்தரமான தீர்வு அல்ல. அவ்வாறு அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் இரவு நேரத்தில் சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அதனை மறுநாள் காலையில் குடித்துவர அப்பிரச்சினையை அடியோடு போக்க முடியும். அடுத்தபடியாக சர்க்கரை நோயும் தற்காலத்தில் அதிக பேருக்கு உள்ளது. அவர்கள் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வர அவர்களது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். மிகப்பெரிய மாற்றத்தை உணர்வார்கள்.

மேலும் வெந்தயம் செரிமானத்திற்கு உதவும் ஓர் பொருள். மேலும் வெந்தயம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் , வயிறு வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கும் இது தீர்வு காண்கிறது. தினந்தோறும் நீரில் ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும். உடம்பில் பித்தம் அதிகமாவதால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு வெந்தயம் மட்டுமே. இதனை தினந்தோறும் உண்டுவர பல நன்மைகளை காண முடியும்.

Leave a Comment