சிறிய படங்களையும் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்… நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டி…!

Photo of author

By Sakthi

சிறிய படங்களையும் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்… நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டி…!

Sakthi

Updated on:

சிறிய படங்களையும் மக்கள் வெற்றி பெற வைப்பார்கள்… நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டி…

 

மக்கள் சிறிய அளவிலான பட்ஜெட் படங்களையும் பெரிய அளவில் வெற்றி பெற வைப்பார்கள் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார்.

 

2010ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக ஹரிஷ் கல்யாண் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் வில் அம்பு, பொறியாளன் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஹரிஷ் கல்யாண் முதல் சீசனின் இறுதி வாரம் வரை சென்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.

 

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவரது வாழ்க்கை மாறியது. அதன் பின்னர் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இளைய ராணியும், தனுஷ் ராசி நேயர்களே, தாராள பிரபு ஓ மணப் பெண்ணே ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறிவிட்டார்.

 

நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் தற்பொழுது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி தயாரிக்கும் முதல் திரைப்படமான ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை இவானா கதாநாயகியாகவும், நடிகை நதியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி எல்.ஜி.எம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். எல்.ஜி.எம் திரைப்படம் ஜூலை 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தியில பேட்டியில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் படத்தை பற்றி பேசினார்.

 

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாண் அவர்கள் “பெரிய பெரிய படங்களை வெற்றி பெற வைத்த மக்கள் சிறிய படங்களையும் வெற்றி பெற வைப்பார்கள். அயேத்தி, குட் நைட், டாடா போன்ற சிறிய படங்களையும் மக்கள் வெற்றி பெற வைத்துள்ளனர். இது மாதிரியான உங்களின் அதாவது மக்களின் உதவி தமிழ் சினிமாவிற்கு ஆரோக்கியமான ஒன்று. அதைப் போலவே நாங்கள் எல்.ஜி.எம் திரைப்படத்தை உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். எல்.ஜி.எம் திரைப்படத்தையும் வெற்றி பெற வைப்பீர்கள் என்று நம்புகிறேன். தல தோனி அவர்களின் தயாரிப்பில் நடித்தது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது” என்று அவர் கூறினார்.