ஜவான் படத்தில் ஒரே பிரேமில் விஜய் மற்றும் ஷாரூக்கான்… உண்மையை உளரிய சண்டை பயிற்சியாளர்… !

0
37

ஜவான் படத்தில் ஒரே பிரேமில் விஜய் மற்றும் ஷாரூக்கான்… உண்மையை உளரிய சண்டை பயிற்சியாளர்…

 

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் அவர்களும் இருக்கிறார் என்று படத்தின் சண்டைப் பயிற்சியாளர் கூறிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

ராஜா ராணி திரைப்படத்தின்.மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அட்லி அடுத்தடுத்து நடிகர் விஜய் அவர்களுடன் தெறி, மெர்சல், பிகில் என்று மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறிய அட்லி தற்பொழுது ஹிந்தி சினிமா துறையிலும் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

 

நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தை இயக்குவது மூலமாக இயக்குநர் அட்லி பாலிவுட் அதாவது ஹிந்தி சினிமா துறையிலும் அறிமுகமாகியுள்ளார். ஜவான் திரைப்படத்தில நடிகர் ஷாருக்கான் அவர்களுடன் இணைந்து நடிகை நயன்தாரா, நடிகை தீபிகா படுகோன், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

 

ஏற்கனவே நடிகர் விஜய் அவர்கள் ஜவான் திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தது. அதாவது நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது தெரியும். அதனால் நடிகர் விஜய் ஜவான் படத்தில் நடித்திருப்பார் என்று கூறப்பட்டது.  இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் சண்டைப் பயிற்சியாளர் அளித்த பேட்டி அந்த செய்தியை உண்மையாக்கி உள்ளது.

 

ஜவான் திரைப்படத்தின் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் “ஜவான் திரூப்படத்தில் ஒரே பிரேமில் அதாவது ஒரே காட்சியில் நடிகர் ஷாருக்கான் அவர்களும் நடிகர் விஜய் அவர்களும் நடித்துள்ளனர். அந்த காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றது” என்று கூறினார். பின்னர் யானிக் பென் அவர்கள் “நான் நடிகர் விஜய் சேதுபதி அவர்களைத் தான் அவ்வாறு கூறினேன்” என்று மலுப்பி பேசினார்.

 

சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் அளித்த இந்த நேர்காணல் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனால் நடிகர் விஜய் அவர்களும் ஜவான் திரைப்படத்தில் நடித்திருப்பார் என்று ரசிகர்கள் அனைவரும் பேசி வருகின்றனர். என்னவாக இருந்தாலும் செப்டம்பர் 7ம் தேதி இந்த தகவல் உண்மையா இல்லையா என்று தெரிந்துவிடும்.