மெட்ரோ பயணத்தை நாடும் பொதுமக்கள்! இதனால் தான் போக்குவரத்து போலீஸ் சார் வெளியிட்ட தகவல்!
டெல்லியில் பிரதான மேம்பாலங்கள் சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதனால் முக்கிய சந்திப்புகளில் நேற்று மூன்றாவது நாளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் வீணாவதை தடுக்க மெட்ரோ ரயில் பயணத்திற்கு பலர் மாறி வருகின்றனர். மேலும் டெல்லி மேம்பாலம் சீரமைப்பு பணிக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பகுதி மூடப்பட்டது. தொடர்ந்து 50 நாட்களுக்கு டெல்லி மேம்பாலம் மூடப்பட்டு இருக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் டெல்லி ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை ரங்கபுரி மற்றும் ராஜகாளிக்கும் இடையேயான சாலை கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 90 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. இதனால் சாலை மாற்றமாக செல்லும் மக்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். வர்த்தகரான கேஷவ்குமார் கூறுகையில் தெற்கு மற்றும் தென்கிழக்கு டெல்லியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக உள்ளது.
நொய்டாவில் இருந்து அஸ்ரம் மேம்பாலம் வழியாக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என நினைத்து வந்தேன். ஆனால் டெல்லியில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கினேன் மீண்டும் நான் குருகிராம் செல்ல வேண்டும். பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மெட்ரோ ரயில் செல்ல முடிவு செய்துள்ளேன் என கூறினார்.
மேலும் இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அனுபவத்தை பல ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். மேற்கு டெல்லியிலும் கட்டுமான பணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த வழித்தடத்தை பயன்படுத்த வேண்டாம் என்று டெல்லி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.