கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா?? 

0
109

கடும் வெப்பத்தினால் அவதிப்பட்ட மக்கள்!! 174 ஆண்டுகள் இல்லாத வெப்பம் இந்த மாதத்தில் தானா?? 

இந்த ஆண்டில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு கோடைகாலம் தொடக்கம் முதலே வெப்பம் கடுமையாக வாட்டி வந்தது. எனவே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு கூட தாமதமாக தான் தொடங்கியது. ஏனெனில் இந்த ஆண்டு அந்த அளவு வெப்பம் மக்களை வாட்டி வதைத்தது. அவர்களின் இயல்பு வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டதாக ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

அதன்படி இந்த ஆண்டின் ஜூன் மாதம் நிலவிய வெப்பநிலையானது கடந்த 174 ஆண்டுகளாக இல்லாமல் நிலவிய அதிகபட்ச வெப்பநிலை நிலவிய மாதம் என அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சர்வதேச மற்றும் பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு [என்ஓஏஏ ] தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இதுப்பற்றி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது,

கடந்த ஜூன் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 20ஆம் நூற்றாண்டின் சராசரி வெப்ப நிலையை விட 33.9 டிகிரி ஃ பாரன்ஹீட் அதிகமாக பதிவாகியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டின் ஜூன் மாதம் தான் கடந்த 17௪  ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட மாதமாகும்.

தற்போதுள்ள இந்த சூழ்நிலையில் இதுவரை அதிகபட்ச வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட முதல் 10 ஆண்டுகளில் 2023 ஆண்டு அதிக வெப்பநிலை இடம் பெறுவதற்கு 99 சதவீத வாய்ப்புகள் உள்ளது. மேலும் முதல் 5 ஆண்டுகளில் ஒன்றாவதற்கு 97 சதவீத வாய்ப்புகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Previous articleஅரசு அலுவலகங்களின் நேரம் மாற்றம்!! மாநில அரசு பரபரப்பு தகவல்!!
Next articleSBI மற்றும் ICICI வங்கியில் இருந்து வந்த சூப்பர் அப்டேட்!! இனி யுபிஐ-யில் பண பரிவர்த்தனை செய்யலாம்!!