சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விசாரணை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்டது. அதில் அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட போது ஞானசேகரன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்த பிறகு நான் சொல்லும் சார் கூட நீ தனிமையில் இருக்க வேண்டும் என அவர் கூறி இருந்தார். இந்த செய்தி இணையத்தில் மிக வைரலக பரவியது.
அதனை அடுத்து அதிமுக-வினர் யாரு அந்த சார்? என போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டி அவர்களின் ஆதங்கத்தை வெளிபடுத்தினர். தற்போது சட்டசபை நடந்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.கள் யார் அந்த சார்? என்ற பேட்ச் அணிந்து வந்தனர். மேலும் இதனை கண்டித்து திமுக எம்.எல்.ஏ.கள் இன்று அவர்கள் ஒஉர் போஸ்டர் எடுத்து வந்துள்ளனர்.
சென்னை, அண்ணா நகர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அ.தி.மு.க., நிர்வாகி சுதாகரின் புகைப்படத்துடன் சட்டசபைக்கு தி.மு.க., எம்.ஏ.எல்.,கள் வந்தனர். இவர் அந்த சார்? என்ற பதாகைகளுடன் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சட்டசபை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த இரண்டு கழகங்களிலும் “சார்கள்” அதிகம் என்று மக்களுக்குப் புரிந்துவிட்டது.