இன்றைய காலத்தில் வாழ்க்கை முறை உணவுமுறை மாற்றங்களால் ஆண்களுக்கு மலட்டு தன்மை பிரச்சனை அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.ஆண்களின் ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது முக்கியம்.இரத்த ஓட்டம் குறைந்தால் விறைப்புத் தன்மை குறையும்.இதனால் உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.எனவே ஆண்குறி விறைப்புத் தன்மை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
1)ஆண்குறியில் இரத்த ஓட்டம் சீராக இருக்க தினமும் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.தினமும் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
2)புரதம் நிறைந்த உணவுகள்,கொட்டை வகைகள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.பழங்கள் மற்றும் முழு தானிய உணவுகளை தினசரி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
3)உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
4)மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.கடுமையான மன அழுத்தம் இருந்தால் அவை இரத்த ஓட்டத்தை பாதிக்கச் செய்துவிடும்.இதனால் பாலியல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.எனவே முடிந்தவரை மன அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.
5)மது மற்றும் புகைப்பழக்கத்தை முழுமையாக கைவிட வேண்டும்.இந்த பழக்கங்கள் உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதோடு பாலியல் உணர்வு குறைந்துவிடும்.
6)ஆண்மையை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பாதாம்,முந்திரி போன்ற பருப்பு வகைகளை உட்கொள்ள வேண்டும்.அமுக்கிரா சூரணம்,ஓரிதழ் தாமரை சூரணம் போன்றவை விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் தன்மை கொண்டது.