ஆதார் கார்டு இணைக்காதவர்களுக்கு இன்று முதல் அரிசி கோதுமை இல்லை!! அதிர்ச்சியில் மக்கள்!!
ஆதார் கார்டு இல்லாமல் இந்தியாவில் எதுவும் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும் அனைத்து ஆவணகளுடனும் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனையடுத்து பான் கார்டு உடன் ஆதார் கார்டு இணைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. தற்போது வெளிவந்த செய்தியில் ஆதார் கார்டு ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் ரேஷன் கடையில் இனி அரிசி மற்றும் கோதுமை கிடையாது என்று அறிவித்திருந்தது. இந்தியா முழுவதும் தற்போது அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றின் விலை சற்று அதிகரித்தது காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுக்கும் வழங்கும் அரிசி மற்றும் இதர பொருட்கள் நிறுத்துவதாக அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது ஆதார் கார்டுடன் ரேஷேன் கார்டுகளை இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் அரிசி மற்றும் கோதுமை போன்ற பொருட்கள் கிடையாது என்று அறிவித்திருந்தது.
ஆனால் இன்னும் பெருபாலும் மக்கள் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்று தகவல் வந்துள்ளது. மேலும் அதனையடுத்து ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பலர் இணைக்காமல் உள்ளார்கள். இந்த நிலையில் ஆதார் எண்ணை இணைக்காத ரேஷன் அட்டைதார்களுக்கு அரிசி கோதுமை கிடையாது என்றும், குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளது.