பேப்பர் கப்பில் டீ காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

Photo of author

By Rupa

விசேஷ நிகழ்வுகளில் டீ,காபி,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை வழங்க பேப்பர் கப் பயன்படுத்தப்படுகிறது.முன்பெல்லாம் டீ கடைகளில் கண்ணாடி கிளாஸில் டீ வழங்கப்பட்டது.ஆனால் அந்த வழக்கம் மாறி தற்பொழுது பேப்பர் கப்பில் டீ விற்பனை செய்யப்படுகிறது.

கண்ணாடி கிளாஸிற்கு பதில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்தப்பட்டது.பிளாஸ்டிக், புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது தான் பேப்பர் கப்.

நீங்கள் இந்த பேப்பர் கப்பில் தொடர்ந்து சூடான பானங்களை அருந்தி வந்தீர்கள் என்றால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.அது மட்டுமின்றி மஞ்சள் காமாலை,குடல் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படக் கூடும்.

உங்களுக்கு பேப்பர் கப்பில் டீ,காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால் அது உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும்.உடலில் ஹார்மோன் சமநிலையின்மை உண்டாகும்.பேப்பர் கப்பில் இருக்கின்ற மெழுகு புற்றுநோய் போன்ற கொடிய நோய் பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

வெறும் காகிதத்ததால் செய்யப்பட்ட கப்பை பயன்படுத்த முடியாது என்பதால் அதில் ஹைட்ரோஃபோபிக் என்ற பிளாஸ்டிக் பூசப்படுகிறது.இந்த பேப்பர் கப்பில் நாம் சூடான பானங்களை ஊற்றி பருகும் போது உடலில் பிளாஸ்டிக் நுழைந்து கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும்.

தொடர்ந்து பேப்பர் கப்,பேப்பர் தட்டுகளை பயன்படுத்தி வந்தால் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.செரிமானப் பிரச்சனை,வயிறு வலி,வயிறு எரிச்சல்,ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.எனவே முடிந்தவரை பேப்பர் கப்,தட்டுகள் பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.